புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள், ஏப்ரல் 10 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 354 புள்ளிகள் உயர்ந்து 75,038 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி111 புள்ளிகள் உயர்ந்து 22,753 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் Coal India, BPCL, Kotak Mahindra Bank, ITC ,Hindalco Industriesஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல்Cipla, Maruti Suzuki, HDFC Life, Divis Labs,SBI Life Insuranceஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. மருந்து நிறுவன பங்குகள் தவிர்த்து மற்ற அனைத்துத் துறை பங்குகளும் விலையேறி முடிந்தன. ஊடகம், பொதுத்துறைவங்கி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் தலா 1-2 விழுக்காடு வரை உயர்ந்து முடிந்தன. Aarti Industries, ICICI Bank, NTPC, M&M, Aegis Logistics, Castrol India, HEG, Honeywell Automation, Inox Green, Interglobe Aviation, KSB Pumps, Laurus Labs, Lloyds Metals, PB Fintech, Petronet LNG, SAIL, United Spirits, Vedanta,உள்ளிட்ட 150க்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. 54 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை..
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு சவரன் 54 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 6705 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 53ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 89 ரூபாயாக விற்கப்படுகிறது.. கட்டி வெள்ளி விலை 89 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.