லேசாக உயர்ந்த பங்குச்சந்தைகள்
இந்தியப் பங்குச்சந்தைகளில் ஜுன் 14ஆம் தேதி ஏற்றம் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 85 புள்ளிகள் அதிகரித்து 63,228 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39 புள்ளிகள் அதிகரித்து 18755 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. அமெரி்க்காவில் பணவீக்கம் கணிசமாக அதாவது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியாவின் ஒட்டுமொத்த விற்பனை பணவீக்கம் 3.48 விழுக்காடு மைனசில் உள்ளது.இது கடந்த ஏப்ரலில் இருந்ததைவிடவும் புஜ்ஜியம் புள்ளி 92 விழுக்காடு குறைவாகும். கடந்த 2015நவம்பருக்கு பிறகு மீண்டும் மொத்த பணவீக்கம் 3விழுக்காடாக இருக்கிறது.tata Consumer Products, Tata Steel, Grasim Industries, JSW Steel ஆகிய நிறுவன பங்குகள் லாபம் பதிவு செய்தன.IndusInd Bank, Bajaj Finance, Axis Bank, Hero MotoCorp,பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தை பதிவு செய்தன. வங்கித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் தவிர்த்து மற்ற துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன. 3M India, Bharat Petroleum Corporation, Capacite Infraprojects, IDFC First Bank, Tata Consumer Products, Indian Oil Corporation உள்ளிட்ட நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டன. தங்கத்தின் விலை கிராமுக்கு 40ரூபாயும் சவரனுக்கு 320 ரூபாயும் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை 5550 ரூபாயாகவும்,ஒரு சவரன் 44,400 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் சரிந்து 78 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 78 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இங்கே குறிப்பிட்டிருப்பதுடன் ,3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி சேதாரம் சேர்த்தால்தான் உண்மையான விலை கிடைக்கும். ஆனால் கடைக்கு கடைசெய்கூலி,சேதாரம் மாறுபடும் என்பதால் குறைவான செய்கூலி,சேதாரம் உள்ள கடைகளை தேர்வு செய்து தரமான நகைகளை வாங்குவது புத்திசாலித்தனம்.