இருக்குற இடம் தெரியாம இருக்கும் பங்குச்சந்தைகள்..
அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. அதாவது மார்ச் மாதத்திற்கு பிறகு பணவீக்கம் எப்படி இருக்கும் என்ற கணிப்புஅது. இதிலும் பெரிய மாற்றம் இருக்காது என்று அமெரிக்க தகவல்கள் வெளியானதை அடுத்த, அமெரிக்க பங்குச்சந்தைகளில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்திய பங்குச்சந்தையில், இருந்த லாபம் அனைத்தும் விற்பதிலேயே முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.இதனால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2 புள்ளிகள் சரிந்து 61 ஆயிரத்து761 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1 புள்ளி அதிகரித்து 18 ஆயிரத்து 265 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. பெரிய சரிவு ஏற்படாமல் தப்பியதே என்று முதலீட்டாளர்கள் இதனால் நிம்மதி அடைந்துள்ளனர். இண்டஸ் இன்ட், டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நல்ல லாபத்தை தேசிய பங்குச்சந்தையில் பதிவு செய்தன. இதே நேரம் ஐடிசி,பஜாஜ் பினான்ஸ் பங்குகள் சரிவை கண்டன. பங்குச்சந்தைகள் பங்கம் செய்யாமல் தப்பிய நிலையில் தங்கத்தின் விலையும் பெரிய மாற்றமின்றியே தொடர்ந்தது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை 7 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 717 ரூபாயாகவும் ஒரு சவரன் தங்கம்45,736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 82 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையானது. கட்டி வெள்ளியும் கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து 82 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கே கூறப்பட்டுள்ள தங்கம் விலையுடன் ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை செய்கூலி,சேதாரம் மாறுபடும் என்பதையும் கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே நிஜமான தங்கம் விலையாகும் என்பதை மனதில் வைத்துக்கொள்வோம்.