இயல்பா முடிந்த பங்குச்சந்தைகள்!!!
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை ஏப்ரல் 10ம் தேதி, இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய மாற்றம் இன்றி வர்த்தகம் நிறைவுற்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13புள்ளிகள் உயர்ந்து 59,846 புள்ளிகளாக இருந்தது. இதே பாணியில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 17,624புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. வர்த்தகம் தொடங்கியது முதலே சாதகமாக இருந்த பங்குச்சந்தைகள் கடைசி ஒரு மணி நேரத்தில் முதலீட்டாளர்கள் லாபம் பதிவிட விரும்பியதால் லேசாக சரிந்தது. இருந்தபோதும் இந்திய பங்குச்சந்தைகள் பெரிய மாற்றமின்றி முடிந்தன. ஆட்டோமொபைல் துறை,ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்,நல்ல முன்னேற்றம் கண்டன.இந்தியாவின் விலைவாசி குறித்த தரவுகளும்,அமெரிக்காவின் தரவுகளும் இந்திய பங்குச்சந்தைகளை தீர்மானிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக மாறியுள்ளன. Tata Motors, ONGC, Grasim Industries, Adani Enterprises,Wipro நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. Bajaj Finance, Tata Consumer Products, HUL, Asian Paintsஉள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் மட்டும் 4விழுக்காடு வரை விலையேற்றம் கண்டன. பங்குச்சந்தைகள் நிலைமை இப்படி இருக்கையில், தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் சரிந்துள்ளது ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது, ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 200 ரூபாய் சரிந்து 80ஆயிரம் ரூபாயாக விற்பனையானது. இந்த விலைகளில் தங்கம் வாங்கும் போது மேல் சொன்ன விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி, சேதாரம் கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு நகைகளை வாங்குங்கள்.