பாதாளத்துக்கு சென்ற பங்குச்சந்தைகள்…

இந்திய பங்குச்சந்தைகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பெரிய சரிவை சந்தித்தன.மும்பை பங்குச்சந்தைகுறியீட்டு எண் சென்செக்ஸ் 542 புள்ளிகள் சரிந்து 65240 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு 144 புள்ளிகள் சரிந்து 19,381 புள்ளிகளாக சரிந்ததுள்ளது. வங்கிகள், உலோகம்,ரியல் எஸ்டேட் துறை பங்குகள் சரிந்தன. கடைசி நேரத்தில் மருந்துத்துறை பங்குகள் மீது முதலீடுகள் அதிகரித்தன.இதனால் ஓரளவுக்கு தாக்கம் குறைந்தது. வர்த்தகத்தின் இரண்டாவது பாதியில் லாபத்தை பதிவு செய்ய முதலீட்டாளர்கள் செய்த முயற்சியால் பின்னடைவு ஏற்பட்டது. UPL, Titan Company, Bajaj Finserv, ONGC, ICICI Bank உள்ளிட்ட பங்குகள் பெரிதாக சரிந்தன. Adani Enterprises, Eicher Motors, Divis Labs, Infosys, Adani Ports உள்ளிட்ட துறை பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. மருந்துத்துறை பங்குகள் 1 விழுக்காடு வரை உயர்ந்தன. Poonawalla Fincorp, MOIL, IDBI Bank, Lupin, Zomato Sun Pharma, Autobindo Pharma, RateGain Travel Technologies, Hindustan Copper, Dr. Reddy’s Laboratories உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் பெற்றன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் விலை குறைந்து 5535 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 44280 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 80 காசுகள் குறைந்து 78 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரத்து 800 ரூபாய் விலை குறைந்து 78 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் ஜிஎஸ்டி 3 விழுக்காடும், செய்கூலி சேதாரமும் சேர்க்க வேண்டும், இதில் ஜிஎஸ்டி நிலையானது எந்த கடையிலும் மாறாது, ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.