ஆறுதல் தந்த பங்குகள்..
இந்திய பங்குச்சந்தைகள் திங்கட்கிழமை சற்று நிலைமையை தேறின. கடந்த 4 வர்த்தக நாட்களாக சரிந்து வந்த பங்குச்சந்தைகள் தற்போது உயரத் தொடங்கியுள்ளன.வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 66ஆயிரத்து 23 புள்ளிகளாக இருந்தது. இது முன்தின மதிப்பைவிட14.52 புள்ளிகள் அதிகமாகும்.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 0.30 புள்ளிகள் உயர்ந்து 19674 புள்ளிகளாக இருந்தது. வர்த்தகம் தொடங்கியதும் மோசமாக வீழ்ந்திருந்த பங்குச்சந்தைகள், பிற்பாதியில் ஓரளவு சீரடைந்தன.Bajaj Finance, Tata Consumer Products, Apollo Hospitals, Bajaj Finserv Coal India நிறுவன பங்குகள் கணிசமாக விலை உயர்ந்து லாபத்தை பதிவு செய்தன.Hindalco Industries, SBI Life Insurance, Hero MotoCorp, Infosys,Dr Reddy’s Laboratories.உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை சரிந்தன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் மட்டும் ஒன்றரை விழுக்காடு விலை ஏற்றம் கண்டன.தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.7விழுக்காடு சரிந்தன.Wonderla Holidays, Union Bank Of India, South Indian Bank, Balkrishna Industries, Lokesh Machines, Jyoti, Maruti Suzuki India, Tata Consumer Products, JK Tyre & Industries, Bajaj Healthcare, Multi Commodity Exchange Of India ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து 44ஆயிரத்து 240 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 1 ரூபாய் குறைந்து 5520 ரூாபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 79 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300ரூபாய் குறைந்து 79ஆயிரம் ரூபாயாகவும் விற்கப்படுகிறுது.இந்த விலைகளுடன் 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், செய்கூலி,சேதாரமும் சேர்க்க வேண்டும், ஆனால் கடைக்கு கடை இரண்டாவதாக கூறியது மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்