சுற்றிச்சுழன்று இந்திய சந்தைகளை காலி செய்த பங்குகள்
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 183 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 727 புள்ளிகள் சரிந்தன தேதிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் சரிவு காணப்பட்டது.வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 17ஆயிரத்து 600 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. Power Grid Corporation, UltraTech Cement, Adani Enterprises, Reliance Industries, Apollo Hospitals உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தன. Divis Labs, HCL Technologies, IndusInd Bank, Cipla , Nestle India உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலையேற்றம் கண்டன. ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு துறை பங்குகளை விற்பதில் முதலீட்டாளர்கள் குறியாக இருந்தனர்.மருந்து மற்றும் கட்டுமானத்துறை பங்குகள் ஏற்றம் கண்டன. கலவையான சூழலே இந்திய பங்குச்சந்தைகளில் காணப்பட்டது.100க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றங்களையும் 52 வாரங்களில் இல்லாத உச்சங்களையும் பெற்றிருந்தன. தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 5ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 200 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டது. வெள்ளி விலை 1 ரூபாய் 10 காசுகள் கிராமுக்கு சரிந்து 80 ரூபாய் 50 காசுகளுக்கும் விற்கப்பட்டது. கட்டி வெள்ளி ஒரு கிலோ 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.தங்கம் மேலே சொன்ன விலையுடன் ஜிஎஸ்டி 3 விழுக்காடு மற்றும் கடைக்கு தகுந்தபடி செய்கூலி சேதாரம் மாறுபடும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.