சமாளித்து ஆடும் சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகளில் நவம்பர் 22ஆம் தேதி அன்று சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்ந்து 66,023 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 28புள்ளிகள் உயர்ந்து 19, 811 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. உலகளவில் நிலவிய கலவையான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. BPCL, Cipla, NTPC, Infosys and Power Grid Corporation ஆகிய நிறுவன பங்குகள், நிஃப்டியில், பெரிய லாபத்தை பதிவு செய்தன. IndusInd Bank, Hindalco Industries, Kotak Mahindra Bank, Adani Enterprises, Adani Port ஆகிய நிறுவன பங்குகள் பெரிதாக சரிவை கண்டன. உலோகம், வங்கி,ரியல் எஸ்டேட்துறை பங்குகள் சுமார் அரை விழுக்காடு வரை விலை குறைந்தன. தகவல் தொழில்நுட்பம் , எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை, ஆற்றல் துறை, சுகாதாரத்துறை பங்குகள் 0.3 முதல் 1 விழுக்காடு வரை விலை உயர்ந்தன CG Power, eClerx Services, Vardhman Textiles, New India Assurance, UNO Minda, KPR Mill, KSB Pumps, Aurobindo Pharma, Hitachi Energy, GlaxoSmithKline Pharmaceuticals உள்ளிட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி 45840 ரூபாயாக இருக்கிறது. ஒரு கிராம் தங்கம் 5730 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 400 ரூபாய் குறைந்து 79ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான சரக்கு மற்றும் சேவை வரியும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி,சேதாரம் என்பது கடைக்கு கடை மாறுபடும்.