டமாலென விழுந்த சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகள் அக்டோபர் 18 ஆம் தேதி பெரிய சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 551 புள்ளிகள் குறைந்து 65,877 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி140 புள்ளிகள் குறைந்து 19,671 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. துவக்கத்தில் தடுமாறத் தொடங்கிய பங்குச்சந்தைகள், கடைசி வரை சரிந்தே முடிந்தன. Bajaj Finance, Bajaj Finserv, NTPC, HDFC Bank,Axis Bank, உள்ளிட்ட நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன.Cipla, Dr Reddy’s Laboratories, Tata Motors, Sun Pharma, SBI Life Insurance.உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. ஆட்டோமொபைல் மற்றும் மருந்து நிறுவனங்களைத் தவிர்த்து மற்ற துறை பங்குகள் சரிந்து முடிந்தன. தகவல் தொழில்நுட்பம், உலோகம் உள்ளிட்ட துறை பங்குகள் அரை முதல் 1 விழுக்காடு சரிவை கண்டுள்ளன. Titagarh Rail Systems, Suzlon Energy, Alembic, Gujarat State Fertilizers & Chemicals, Polycab India, KIOCL, NBCCஉள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உச்ச அளவை எட்டின. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை 5560 ரூபாயாக விற்கப்படுகிறது.இது முன்தின விளையைவிட கிராமுக்கு 455 ரூபாய் அதிகம். ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 480 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 78ரூபாய்க்கும், கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இந்த விலைகளுடன் 3%ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும், ஜிஎஸ்டி நிலையான 3%தான் என்றபோதும், செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.