யெஸ் வங்கிக்கு புதிய தூண்டுதல் – Sumitomo Mitsui Banking Corp ரூ.16,000 கோடி முதலீடு
யெஸ் வங்கிக்கு புதிய தூண்டுதல் – ஜப்பான் நிதி மாபெரும் நிறுவனம் சுமிடோமோ மிட்சுயி (Sumitomo Mitsui Banking Corp – SMBC) ரூ.16,000 கோடி முதலீடு
ஜப்பானின் முன்னணி வங்கி குழுமமான சுமிடோமோ மிட்சுயி, யெஸ் வங்கியில் ரூ.16,000 கோடி (சுமார் 1.83 பில்லியன் டாலர்) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இது ஈக்விட்டி, கடன் (debt) வடிவில் இருக்கும். இந்த நிதி செலுத்துதல் யெஸ் வங்கியின் பைலன்ஸ் ஷீட்டை வலுப்படுத்தும்.
இதற்கு மேலாக, எஸ்.எம்.பி.சி. ஏற்கனவே ரூ.13,500 கோடி செலுத்தி, எஸ்.பி.ஐ. (SBI) தலைமையிலான தற்போதைய பங்குதாரர்களிடமிருந்து 20% பங்குகளை வாங்க ஒப்பந்தமாகியுள்ளது.
மொத்தத்தில், முதலீட்டாளர்களுக்கு வெளியேறும் வாய்ப்பு அளிக்கவும், வங்கிக்குள் புதிய மூலதனம் சேர்க்கவும் இந்த ஒப்பந்தங்கள் உதவுகின்றன.
16,000 கோடி முதலீட்டில், 8,500 கோடி யென் மதிப்பிலான பாண்ட் வழியாக குறைந்த வட்டி (2% க்கும் குறைவாக) கடனாக வரும்.
இது யெஸ் வங்கியின் கடன் செலவை பெரிதும் குறைக்கும். மீதமுள்ள 7,500 கோடி ஈக்விட்டியாக முதலீடு செய்யப்படும். இது வங்கியின் மூலதன வலிமையை அதிகரிக்கும்.
இந்த வெளியீட்டுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி பெறும் செயல்முறை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பங்குதாரர்கள் இந்த நிதி திரட்டலுக்கு ஒப்புதல் அளித்தனர். பின்னர் ரிசர்வ் வங்கி, எஸ்எம்பிசி 24.99% வரை பங்கு வாங்க அனுமதி வழங்கியது.
இதில் 20% உள்நாட்டு வங்கிகளிடமிருந்து வாங்கப்படும். கூடுதலான 4.99% பெறுவதற்காக, அட்வென்ட், கார்லைல் போன்ற பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
தற்போது இவர்களின் துணை நிறுவனங்கள் வெர்வென்டா ஹோல்டிங்ஸ் (9.2%)சிஏ பாஸ்க் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (4.2%) மூலம் பங்குகளை வைத்துள்ளனர்.
ஆனால், ரிசர்வ் வங்கி எஸ்.எம்.பி.சி.க்கு இன்னும் ப்ரமோட்டர் அந்தஸ்து வழங்கவில்லை. இது கூடுதல் பொறுப்புகளும் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் முடிந்த பின் தீர்மானிக்கப்படும்.
குறைந்த செலவில் கிடைக்கும் இந்த நிதி, யெஸ் வங்கியின் நெட் இன்டரஸ்ட் மார்ஜின் (NIM) உயர்வுக்கு உதவும். தற்போது 2025 ஜூன் நிலவரப்படி, அது 2.5% மட்டுமே இருந்தது – துறையில் மிகவும் குறைவான அளவு.
