சுந்தர்பிச்சைக்கு பிடித்த உணவுகள்..
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுந்தர்பிச்சை. பிறந்தது இந்தியாவில்தான் என்றாலும் அமெரிக்காவில் அவர் தற்போது முக்கியமான நபராக இருக்கிறார். எத்தனை உயரத்துக்கு சென்றாலும் வேர்களை அவர் மறப்பதில்லை என்பதற்கு சான்றாக ஒரு நிகழ்வு அண்மையில் நடந்துள்ளது. அண்மையில் வருண் மாய்யா என்ற யூடியூபருடன் சுந்தர்பிச்சை நேர்காணல் நடந்தது. அதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இந்தியாவின் தற்போதைய டெக் பணியாளர்கள் பற்றியும் கேள்விகள் சுந்தர் முன்னிலையில் வைக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, தனக்கு பிடித்தமான 3 நகர உணவுகள் குறித்தும் விளக்கியுள்ளார். பெங்களூருவில் தோசையை விரும்பி சாப்பிடுவேன் என்று குறிப்பிட்ட அவர், தனது மனதில் தோசைக்கு எப்போதும் ஒரு நீங்காத இடம் உண்டு என்றார். இதேபோல் டெல்லியிந் சோலே பாதுரே என்ற உணவும், இதேபோல் மும்பையின் பாவ் பஜ்ஜி தமக்கு மிகவும் பிடிக்கும் என்ற சுந்தர், இந்திய வீதி உணவு கலாசாரம் தமக்கும் மிகவும் பிடிக்கும் என்றார். 3 இடியட்ஸ் படத்தில் ஆமிர் கான் மோட்டர் பற்றி பேசும் வசனத்தை சுட்டிக்காட்டி, இந்தியர்கள் ஒரு விஷயத்தின் உள்ளார்ந்த அம்சத்தை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும் என்றார். உலகளவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் சுந்தர் குறிப்பிட்டார்.