பங்குச்சந்தையில் அசுர வேகம்..அதிகாரி வியப்பு..
தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் குமார் சவ்ஹான் உள்ளார்.இவர் இந்திய சந்தைகளில் சமகால பணப்பரிவர்த்தனை குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். தனியார் பத்திரிகையின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,இந்திய வங்கித்துறையும், பங்குச்சந்தைகள் துறையும் , முதலீட்டுத்துறையும் மிகமுக்கியம் என்று சவ்ஹான் கூறியுள்ளார்.இரண்டும் சமமாக இருந்ததால்தான் செயலாக்கங்கள் எளிதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
90களில் வர்த்தகம் செய்தால் அந்த தொகை கிடைக்க 60 நாட்களுக்கும் மேலாகும் என்பதை நினைவுகூர்ந்த அவர்,தற்போது நடப்பதை பார்த்தால் ஏதோ சைன்ஸ் பிக்சன் படம் போல இருக்கிறது என்றார். இங்கு நடக்கும் வர்த்தகம் மற்றும் அடுத்த நாளே பணம் கிடைக்கும் நடைமுறையை உலகமே உற்று நோக்குகிறதுஎன்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வர்த்தகம் செய்த 2 நாட்கள் கழித்துத்தான் பணம் செட்டில் செய்யப்படும், கடந்த ஜனவரியில் இது ஒரு நாளாக குறைக்கப்பட்டது. சந்தை மூலதனத்திலும், செட்டில்மண்ட் செய்வதிலும் நேரத்தை குறைக்க இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. வர்த்தகம் மேற்கொள்ளும் 24 மணி நேரத்தில் அந்த பங்குகள் டீமேட் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்பதே இதன் சுருக்கமாகும்.
குறுகிய நேரத்தில் செட்டில்மண்ட் செய்வது என்பது முதலீட்டாளருக்கு பாதுகாப்பும், நிதி கட்டமைப்பில் எண்ணற்ற பலன்களையும் தருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்தியாவில் இருப்பதைப்போலவே ஒரே நாளில் பரிவர்த்தனை என்பதை 2024-ல் தான் செயல்படுத்த இருக்கின்றனர். கடன்கள் மீது அதிக வட்டிகள் உள்ள இந்த தருணத்தில் விரைவான நடவடிக்கை பலன்தருவதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம்,பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இந்த நடைமுறையை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளன.