ரஷ்யாவுக்கு சப்போர்ட், சீனாவுக்கு அமெரிக்கா அதிரடி…
அமெரிக்காவில் உள்ள வணிகத்துறை, 42 சீன நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை விதித்திருக்கிறது. இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்,விஷயம் உள்ளது. 42 நிறுவனங்களும் ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டதும் தெரிய வந்திருக்கிறது. பின்லாந்து, ஜெர்மனி, இந்தியா, துருக்கி, அரபு அமீரகம் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்களையும் வர்த்தக கட்டுப்பாட்டு பட்டியலில் வைத்துள்ளது அமெரிக்க வணிகத்துறை. உக்ரைனில் சாதாரண பொதுமக்களையும் தாக்கும் வகையில் சில டிரோன்களை குறிப்பிட்ட இந்த சில நாடுகள் உற்பத்தி செய்து ரஷ்யாவுக்கு தந்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்தே அமெரிக்க அமைப்பு இதனை செய்திருக்கிறது. குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்கள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டவை. இதனை ரஷ்யாவுக்கு எதிராகத்தான் பயன்படுத்த விரும்புகிறதே தவிர்த்து உக்ரைனுக்கு எதிராக இல்லை என்பதால் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் கட்டுப்பாடுகள் என்பது தங்கள் மீது செய்யப்படும் அச்சுறுத்தல் என்றும் மிரட்டல் என்றும் சீனா தெரிவித்துள்ளது.உடனடியாக தவறுகளை திருத்திக்கொள்ள அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. 20 மாதங்களுக்கும் மேலாக நடக்கும் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.அமெரிக்க தொழில்நுட்ப டிரோன்களை பயன்படுத்தி டிரோன்கள் தயாரித்து அமெரிக்கா ஆதரவளித்து வரும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அடுத்து இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.