இந்திய சந்தைகளுக்கு வந்த சோதனை..
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை 2ஆம் தேதியான செவ்வாய்கிழமை லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34புள்ளிகள் சரிந்து 79,441 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 24,123 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. L&T, Wipro, Infosys, HDFC Bank,TCSஉள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. Shriram Finance, Bharti Airtel, Kotak Mahindra Bank, Tata Motors,IndusInd Bank ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. தகவல் தொழில்நுட்பம், மூலதனம், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை பங்குகள் 0.3-1 விழுக்காடு வரை உயர்ந்தன. அதேநேரம் வங்கி, ஆட்டோமொபைல், ஆற்றல் துறை பங்குகள் 0.3-0.9 விழுக்காடு வரை சரிவை கண்டன. Solar Industries, 3m India, Deepak Nitrite, Samvardhana Motherson International, Godrej Properties, Oil India, UNO Minda, ACC, Petronet LNG, Persistent Systems, Tech Mahindra, Grasim Industries, UltraTech Cement, JSW Steel உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டன. சென்னையில் செவ்வாய்க்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 520ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6690 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் விலை உயர்ந்து 95 ரூபாய்50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ 800ரூபாய் உயர்ந்து 95ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்