விதிகளை மீறியதாக புகார்..Swiggy, Zomato மீது விசாரணை..!!
Swiggy, Zomato ஆகிய ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த CCI உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் Swiggy, Zomato ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெற்று, உணவகங்களில் உணவுகளை வாங்கி சென்று, வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு விநியோகம் செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்த நிறுவனங்கள் நடுநிலைமை மற்றும் நியாயமற்ற வணிக செயல்பாடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
போட்டியியல் விதிகளை மீறி அதிக அளவில் தள்ளுபடி அளிப்பது, குறிப்பிட்ட ஒருசில உணவகங்களுடன் தனிப்பட்ட முறையில் கூட்டு வைத்திருப்பது, தாமதமாக கட்டணங்களை கொடுப்பது மற்றும் அதிகப்படியான கமிஷன் வசூலிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் இந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், செமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களுக்கு சொந்தமான கிளவுட் கிச்சன் மற்றும் தனியார் லேபிள் பிராண்டுகள் அந்நிறுவன தளங்களில் இடம் பெற்றுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை தேசிய உணவக சங்கம்(NRAI) முன்வைத்துள்ளது.
இதன் அடிப்படையில் இரண்டு நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தும்படி இந்திய போட்டியியல் ஆணையம்(CCI) உத்தரவு பிறப்பித்துள்ளது. 60 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி விசாரணைக்குழுவுக்கு சிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த புகார்கள் மற்றும் விசாரணை குறித்து ஸ்விக்கி, செமேட்டோ நிறுவனங்கள் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.