ஸ்விக்கி,சொமேட்டோவை மேற்கோள் காட்டி பேசிய பிரபலம்
இந்தியாவில் பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்துள்ளோரின் எண்ணிக்கை 4 கோடியை கடந்திருக்கிறது. ஒரு நிகழ்ச்சி ஒன்றில் எடல்வெயிஸ் பரஸ்பர நிதியின் தலைமை செயல் அதிகாரி ராதிகா குப்தா பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், ஸ்விக்கி,சொமேட்டோவுடன்தான் பரஸ்பர நிதி போட்டி போடும் நிலை உள்ளது என்றார். இளைஞர்கள் அதிகம் சேமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எடெல்வெயிஸ் பரஸ்பர நிதியில் 1.2 லட்சம் கோடி ரூபாய் புழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 40 கோடி பேர் ஒரு முதலீடு செய்தால் எப்படி இருக்கும். குறிப்பாக 100ரூபாய் ஓடிடி தளங்களுக்கு இன்று பலரும் செலவழிக்கின்றனர்,ஆனால் அதை சேர்த்து வைக்கத்தான் ஆட்கள் குறைவாக இருப்பதாகவும் அவர் சாடினார். நம் முன்னோர்கள் கடும் பற்றாக்குறையில் வாழ்ந்த நிலையில் நாம் இந்தியர்கள் உருமாற்ற தருணத்தில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். 20களில் இருக்கும் இளைஞர்களை சேமிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிஸ்டமேட்டிக் இன்வஸ்ட்மெண்ட் பிளான் எனப்படும் சேமிப்புத்திட்டத்தில்தான் பங்குச்சந்தைகளில் பலரும் தங்கல் முதலீடுகளை செய்து வருகின்றனர். அக்டோபர்-நவம்பர் காலகட்டத்தில் மக்கள் தீபாவளிக்குத்தான் அதிகம் செலவு செய்ததாகவும்,முதலீடுகள் 22விழுக்காடு வரை குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார். பெரிய முதலீடுகள்தான் மக்களுக்கு தயக்கமாக இருப்பதாகவும்,ஆனால் இந்துஸ்தான் நிறுவனம் சாஷேகளில் ஷாம்புகளை விற்றது போல குறைந்த முதலீடுகளில் மியூச்சுவல் ஃபண்ட்கள் இருந்தால் அது சிறப்பாக இருக்கும் என்று செபியின் தலைவர் மதாபி புரி பூச் கூறியிருக்கிறார்.