இந்திய பங்குச்சந்தைகளில் ஊசலாட்டம்!!!
இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் வியாழக்கிழமை நிகழவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் காலையில் 59ஆயிரத்து700புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது காலை முதலே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட மும்பை பங்குச்சந்தை, வர்த்தக நேர முடிவில் 224 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 932 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியிலும் குறிப்பிடத்தகுந்த ஏற்ற இறக்கம் காணப்பட்டது.வர்த்தக நேர முடிவில் 5.90 புள்ளிகள் குறைந்து 17ஆயிரத்து 610புள்ளிகளாக இருந்தது. WELSPUN INDIA LTD,பாம்பே புர்மா டிரேடிங் மற்றும் ஜிண்டால் நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் ஏற்றம் கண்டன.யுபிஎல், அதானி ஆகிய நிறுவன பங்குகள் சரிந்தன. தேசிய பங்குச்சந்தையில் நிலைமை அப்படியே இருந்தது, பிரிட்டானியா ஐடிசி, இண்டஸ்இன்ட் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. அதானி என்டர்பிரசைர்ஸ்,அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடுமையாக வீழ்ந்தன. இதேபோல் hdfc life,எய்ச்சர் மோட்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த சரிவை கண்டன.வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ,நிலைமை எப்படி இருக்கின்றன என்பதை பொருத்திருந்தே பார்க்கவேண்டும்.