தமிழக வருவாய் பற்றாக்குறை குறையும்.. – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 3.8 சதவீதம் குறையும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில், மின்னணு முறையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
அப்போது வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார்
மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றும், மாநில அரசின் உரிமைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 8 ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு குறையும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையால் மாநில அரசுக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும் என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மூலம்நிலத்தடி நீரை சேமிக்க ரூ. 2787 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.