தமிழர்களுக்கு அதிக வேலை கிடைக்குமாம்..
தைவானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில் அடுத்தாண்டில் பணியாளர்கள் மற்றும் முதலீட்டை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் லீ தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.பிரதமர் மோடியின் 73 ஆவது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள லீ, தனது நிறுவனம் அடுத்தாண்டு வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டை இரண்டையும் இரட்டிப்பாக்கும் என்று கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து முதலீடுகளும் அதிகம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டும் இந்த நிறுவனத்தில் 40ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.மின்சாரவாகனங்கள் உற்பத்தியில் பாக்ஸ்கான் நிறுவனம் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதன் பரிசீலனையில் தமிழ்நாடும் உள்ளது. தமிழ்நாடு,கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஆந்திரபிரதேசத்திலும் இந்த நிறுவனம் மிகவும் அதிக முதலீடுகளை செய்து வருகிறது.மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம் விரைவில் மின்சார வாகனங்களையும் தயாரிக்க இருப்பது முதலீட்டாளர்கள் மட்டுமின்றி இந்த துறையில் வேலை தேடுவோருக்கும் நற்செய்தியாக அமைந்திருக்கிறது. இந்தியர்களுக்கு அதிக வேலை கிடைக்கும்பட்சத்தில் அது இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.