இ-பைக் விற்பனைக்கு டார்கெட்..!!! ..
நடப்பு நிதியாண்டுல் இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களை 10 லட்சத்துக்கும் அதிகமாக விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தாண்டு மட்டும் 5 லட்சத்து 64 ஆயிரம் மின்சார பைக்குகளை FAME-2 என்ற திட்டத்தில் அரசு மானியம் வழங்கியுள்ளது. இதனை மேலும் இன்னும் 5 லட்சம் அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு 2,000 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த மானியத்தை மத்திய அரசு தற்போது 3,500 கோடியாக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது. கடந்தாண்டில் விற்றதைவிட ,மும்மடங்காக மின்சார பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. 2 சக்கர வாகனங்கள் 7 லட்சத்து 27 ஆயிரம் மின்சார வாகனங்கள் இதுவரை விற்கப்பட்டுள்ளன. இதில் 40 விழுக்காடு இருசக்கர வாகனங்களுக்கு பேம்-2 திட்டத்தின் மூலம் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த விலையில் 15 விழுக்காடு அளவுக்கு மானியம் தரப்படுகிறது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் இந்தியா முழுக்க 46,000 மின்சார பைக்குகள் விற்பனையாகியுள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மின்சார பைக்குகள் மீதான ஆவல் அதிகரித்துள்ளது.வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி மானியத்துக்காக போலி ஆவணங்களை தாக்கல் செய்த நிறுவனங்கள் மீது மத்திய அறது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. மத்திய அரசின் மானியத்தை பெற 18 அம்சங்களை நிறுவனங்கள் பூர்த்தி செய்ய வேண்டும், 27 நிறுவனங்கள் மானியம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில் அதில் 7 நிறுவனங்கள் தகுதிபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.