முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை தரும் டாடா!!
தொட்டதை எல்லாம் வெற்றியாக மாற்றும் டாடா குழுமம் தனது புதிய மின்சார வாகனப்பிரிவை வலுப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈக்விட்டியில் முதலீடு செய்வோர் மற்றும் நிதி முதலீடு செய்வோரிடம் டாடா குழுமம் ஆலோசனை செய்கிறது. அதாவது மின்சார வாகனங்களின் பிரிவில் உள்ள கொஞ்சம் கொஞ்சம் பங்குகளை விற்றுவிடும்படி கேட்டு வருகிறது. கொஞ்சம் வைத்திருக்கும் கடனை அடைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக திரட்டவும் அந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஈக்விட்டி வகையிலான பங்குகளை விற்கவும் அந்நிறுவனம் திட்டம் தீட்டி வருகிறது. அரபு அமீரகத்தில் இருந்து அபுதாபி இன்வஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, முபதுல்லா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மற்றும் சவுதி அரேபியாவின் பொதுமுதலீட்டு நிதி மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த டெமாசக் ஹோல்டிங்க்ஸ், கே.கே.ஆர். மற்றும் ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களின் நிதியும் மின்சார வாகனப்பிரவுக்கு களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் சுற்று முதலீட்டில் சிறிய அளவு ஈக்விட்டியும், அடுத்த சுற்றில் பெரிய முதலீடுகளையும் ஈர்க்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. டாடா குழுமம் 2026ம் ஆண்டுக்குள் 10 புதிய மின்சார கார்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2022-ல் மட்டும் இந்தியாவில் விற்பனையாகும் 5-ல் 4 மின்சார கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களாக உள்ளது.