நெக்ஸ்ட் லெவல் காம்பினேஷன்ல கைகோர்த்துள்ள டாடாவும் ஊபரும்..
மின்சார கார்களின் கனவை நிஜமாக்கி அதை சாத்தியமாக்கியுள்ள டாடா நிறுவனம் அடுத்தகட்டமாக ஊபர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. 25 ஆயிரம் expres-t ரகத்தில் டாடா மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய பிப்ரவரி 20ம் தேதியான திங்கட்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவனத்துக்கு டாடா மோட்டார்ஸ் உதவி செய்யும். அதாவது இனி வாடகை டாக்சிகளும் மின்சார கார்களில் இயங்கும் வகையில் உற்பத்தியை டாடா அதிகரிக்க உள்ளது. பல கட்டங்களாக கார்களை டெலிவரி செய்ய உள்ளதாக டாடா குழுமம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக பிப்ரவரியில் டெலிவரி துவங்கியுள்ளது. இனி படிப்படியாக அனைத்து கார்களையும் ஊபர் வசம் டாடா ஒப்படைக்க இருக்கிறது. Fleet என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை சேவைகளில் 2 ரகங்களில் கார்கள் வர உள்ளன. ஒன்று 315 கிலோ மீட்டர், மற்றொன்று 277 கிலோமீட்டர். Xpres -T என்ற இந்த வகை கார்களின் பேட்டரிகள் 26கிலோவாட் மற்றும் 25.5 கிலோவாட் திறன்பெற்றவை. பூஜ்ஜியத்தில் இருந்து 80 விழுக்காடு சார்ஜை 59 மற்றும் 110 நிமிடங்களில் செய்துவிடமுடியும். புளூஸ்மார்ட் மற்றும் ஓலாவும் மின்சார கார்களை வாடகைக்கு விட திட்டமிட்டுள்ள நிலையில், ஊபர் மற்றும் புளூஸ்மார்ட் கார்களுக்கு டாடா கார்களை உற்பத்தி செய்து ஸ்மார்ட்டான முடிவை எடுத்துள்ளது