விஸ்ட்ரான் இந்தியாவின் பங்குகளை வாங்கியது டாடா..
ஐபோன் உற்பத்தியை ஏற்கனவே இந்தியாவில், விஸ்ட்ரான், பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில் விஸ்ட்ரான் இந்தியாவின் உற்பத்தித்துறை பங்குகளை வாங்க டாடா குழுமம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
விஸ்ட்ரான் இந்தியா, சிங்கப்பூர் நிறுவனமான எஸ் எம் எஸ் இன்போகாம் ஆகிய நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. விஸ்ட்ரான் இந்தியாவின் 100விழுக்காடு பங்குகளை டாடா குழுமம் வாங்கியிருக்கும் சூழலில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை டாடா குழுமம் அதிகாரபூர்வமாக தொடங்க இருக்கிறது. மின்சாதன பொருட்கள் உற்பத்தித்துறையில் கால்பதிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரன்தீர் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் எங்களுக்கும் பங்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட மின்சாதன பொருட்கள் உற்பத்தி துறைக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதுடன் உரிய ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ரன்தீர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 27ஆம் தேதி இதற்கான பணிகள் அதிகாரபூர்வமாக விஸ்ட்ரான் இந்தியாவிடம் இருந்து டாடா குழுமம் மேற்கொண்டது. இது தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்த வணிக ஒப்பந்தம் என்பது 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாகும்,இதில் 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கார்பரேட் லோன் வகையில் கிடைத்துவிடும்.ஐபோன் உற்பத்தியை ஓசூரில் உள்ள டாடா ஆலையில் தொடங்க இருப்பதாக அண்மையில் டாடா குழமம் அறிவித்திருந்தது. ஐபோன் 17ஐ டாடா குழுமம்தான் உற்பத்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.இதற்கான பணிகள் அடுத்தாண்டு இரண்டாவது பிற்பகுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. விநியோக சங்கிலியை ஒரு நாட்டை மட்டும் செய்யாமல் பரவலாக்கும் முயற்சியாக டாடா குழுமத்தின் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது.