கொக்கி போடும் டாடா நிறுவனம் …
இந்தியாவில் நிதி நர்வாகம் செய்யும் நிறுவனங்கள் தற்போதைய சூழலில் ,மிகவும் பிரபலமாக உள்ளன. குறுகிய காலத்தில் இந்த துறை பங்குகள் அதீத வளர்ச்சி பெற்றுள்ளன. இந்த சூழலில் இந்தியாவின் 8வது பெரிய பரஸ்பர நிதி நிறுவனமாக உள்ள யுடிஐ அசட் மேனேஜ்மண்ட் கம்பெனியின் பங்குகளை டாடா வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. யுடிஐ நிறுவனத்தில் எல்ஐசி, பஞ்சாப் நேஷனல் வங்கி,பாரத ,ஸ்டேட்வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகியவற்றின் பெரும்பாலான பங்குகள் உள்ளன. இவற்றை வாங்க டாடா நிறுவனம் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. யுடிஐ நிறுவனத்தில் டாடா குழுமம் முதலீடு செய்ய இருப்பது குறித்து டி ரோவ் குழுமம் முதலில் தகவல் தெரிவித்துள்ளது.இந்த நிறுவனங்கள் இணையும்போது இந்தியாவின் நான்காவது பெரிய மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக உருவெடுக்கும். டாடா நிதி நிர்வாக நிறுவனத்தில் இரண்டு குழும பங்குகள் உள்ளன .அதாவது டாடா சன்ஸ் மற்றும் டாடா இன்வஸ்ட்மென்ட் கார்பரேஷன் ஆகிய இரு பிரிவுகள் டாடா நிதி நிர்வாகத்தின் கீழ் வருகின்றன. 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுடிஐ நிதி நிர்வாக நிறுவனம் வெள்ளிக்கிழமை மதிப்பின்படி 9 ஆயிரத்து 971 கோடி ரூபாயை சந்தை மதிப்பாக கொண்டுள்ளது. யுடிஐ நிறுவனத்தின் 45% பங்குகளை டாடா வாங்கும்பட்சத்தில் டாடா குழுமம் 4ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலுத்தவேண்டி இருக்கும்.இதேபோல் மற்றொரு திறந்த சலுகையாக 2 ஆயிரத்து 500 கோடியை டாடா செலுத்த வேண்டி இருக்கும். யுடிஐ நிறுவனம் சொத்து நிர்வகிக்கும் மதிப்பு மட்டும் 2 லட்சத்து 34ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. யுடிஐ நிறுவனம் பெரிய அளவில் புரோமோட்டர்கள் ஏதும் இல்லை வைத்திருக்கவில்லை என்றாலும் ஸ்பான்சர்களாக எல்ஐசி,பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 4 நிறுவனங்கள் உள்ளன. யுடிஐ ஏஎம்சி நிறுவனம் மொத்த லாபமாக நடப்பு நிதியாண்டில் ஆயிரத்து 319 கோடி ஈட்டியுள்ளது.