சிப் ஏற்றுமதியை தொடங்கிய டாடா எலெக்ட்ரானிக்…
டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவில் உள்ள ஆலையில் இருந்து உற்பத்தியான செமிகண்டக்டர் சிப்களை குறைந்த அளவில் சோதனை முயற்சியாக ஏற்றுமதி செய்திருக்கிறது. ஜப்பான்,அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அசாமின் மோரிகான் பகுதியில் புதிய சிப் தயாரிப்பு ஆலையும், குஜராத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சிப் ஃபவுன்டரியையும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி செய்ய இருக்கிறது. 28 முதல் 65 நானோமீட்டர் அளவுள்ள சிப் தயாரிப்பில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் பணிகளை இறுதிகட்டத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. தற்போது வரை இந்த சிப்கள் எந்த வகையான இயந்திரங்களில் பொருத்தப்பட உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. டோலேராவில் அமைய இருக்கும் ஆலை டாடா நிறுவனமும் தைவானைச் சேர்ந்த பிஎஸ்எம்சி நிறுவனமும் இணைந்து உற்பத்தியை செய்ய உள்ளன. குறிப்பிட்ட இந்த ஆலை 50,000 ஃவேபர்ஸ் எனப்படும் சிப்களை மாதந்தோறும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 28,40, 55, 90 மற்றும் 110 நானோமீட்டர் அளவுகளில் சிப்கள் தயாரிக்கவும் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு பக்கம் டாடா செமிகண்டக்டர் ஆலையை ஆரம்பித்து முன்னேற இருக்கும் நிலையில் அமெரிக்க பிரபல நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது. அந்த அலை ரிலையன்ஸிடம் செல்லும் என்றும் கூறப்படுகிறது. 91 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோர் சிப் தயாரிப்பு மற்றும் 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சிப் அசம்பிளி ஆலையின் அடிக்கல் நாட்டும்போது , செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு திட்டத்தை விரிவாக்கம் செய்வது பற்றி அந்த குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி 72 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். தைவானச் சேர்ந்த பிரபல நிறுவனங்களுடன் இணைந்து டோலேரா பகுதியில் ஆலையை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதமே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.