டாடாவுக்கு 766 கோடி வட்டியுடன் கிடைக்கிறது..!!!
மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் நேனோ கார்களை உற்பத்தி செய்ய பணிகளை டாடா குழுமம் செய்துவந்தது. தற்போது அந்த ஆலை அங்கு இயங்கவில்லை.இது தொடர்பாக Arbitral Tribunalஎன்பபடும் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் தங்கள் தரப்பு வெற்றி பெற்றிருப்பதாகவும், 766 கோடி ரூபாய் மற்றும் அதற்கு உண்டான வட்டியை செலுத்த ஆணை கிடைத்திருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேற்குவங்க வளர்ச்சி கழக நிறுவனத்துக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான வழக்கில் இந்த தீர்ப்பு கிடைத்திருக்கிறது. முதலீடுகள் அதிகளவில் செய்யப்பட்ட நிலையில் அதற்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு நடந்து வந்தது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு 756.78 கோடி ரூபாயும் அதற்கு உண்டான வட்டியும் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 11%வட்டியை அளிக்கவும் மேற்குவங்க அரசு நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேனோ கார்கள் என்பது ரத்தன் டாடாவின் கனவு திட்டமாகும். இந்த திட்டம் பல்வேறு கட்ட இடையூறுகளுக்கு மத்தியில் மேற்குவங்கத்தில் உற்பத்தியானது. பின்னர் ஏற்பட்ட பிரச்னைகளால் மேற்குவங்கத்தில் இருந்த சிங்குர் ஆலை இயங்காமல் இருக்கிறது.