செமி கண்டக்டர் உற்பத்தியில் இறங்கத் துடிக்கும் டாடா! காரணம் என்ன?
டாடா குழுமம் செமி-கண்டக்டர் உற்பத்தியில் தீவிரமாக இறங்கவுள்ளதென்று அதன் தலைவர் என்.சந்திரசேகரன் கூறினார். டாடா குழுமம் அதற்கு புதியதான பல வணிகங்களில் ஏற்கனவே காலடி எடுத்து வைத்துள்ளது.மின்னணு உற்பத்தி, 5ஜி நெட்வொர்க் கருவிகள் , கூடிய விரைவில் செமி கண்டக்டர் உற்பத்தி என்று அவர் IMC சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கூறினார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் (global supply chain) இப்பொழுது சீனாவைப் பெரிதும் நம்பி இருக்கிறன்றனர். இந்த நிலை மாறும் என்று அவர் கூறினார். விநியோகச் சங்கிலித் தேவைகளுக்காக நாம் சீனாவைத் தவிர்த்து வேறு நாடுகளுக்கு செல்வோம் என்று அவர் கூறினார்.
அவ்வாறு உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மாறினால், இந்தியா பயனடையும் என்கிறார் சந்திரசேகரன். டாடா குழுமம் ஏற்கனவே மின்னணு சாதனங்களுக்கான உயர் தொழில்நுட்ப உற்பத்தியில் இறங்கி உள்ளது. இதனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $ 1 டிரில்லியன் மற்றும் மில்லியன் கணக்கான வேலைகளை உருவாக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார்.
ஆட்டோமொபைல் உற்பத்தியில் உலகளாவிய அளவில் பலரும் கூறும் ஒரு புகார் – போதுமான செமி கண்டக்டர்ஸ் இல்லை என்பதுதான். சென்சார்கள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்கள் போன்ற வற்றில் செமி கண்டக்டர்ஸ் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. செமி கண்டக்டர் உற்பத்திக்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படும், ஆனால் அத்தகைய வசதி நம் நாட்டில் இப்பொழுது இல்லை.
செமி கண்டக்டர் உற்பத்தியில் இறங்குவதால், டாடா குழுமம் தன்னிடம் இருக்கும் டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பவர்க்கு சேவை செய்வது மட்டுமில்லாமல் உலகெங்கும் உள்ள கம்பெனிகளுக்கும்வணிகம் செய்யமுடியும். போதுமான செமி கண்டக்டர்ஸ் இல்லாத காரணத்தால் , டாடா குழுமத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover-JLR) வருகிற காலாண்டில் பெரிய நஷ்டம் அடைய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
JLR, கடந்த மாதம் செமி கண்டக்டர் பற்றாக்குறை மோசமடையக்கூடும் என்றும் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அதன் விற்பனை அது திட்டமிட்டதை விட கிட்டத்தட்ட பாதியாகக் குறையக் கூடும் என்றும் கூறி இருந்தது. டாடா மோட்டார்ஸ் மற்றும் JLR அதன் விற்பனை இலக்குகளை அடையத் தவறலாம் என்று தெரிந்தவுடன் டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரியத்தொடங்கின.