அசாம் அரசாங்கத்துடன் டாடா குழுமம் ஒப்பந்தம்..
அரை கடத்தி உற்பத்திக்காக அசாமின் மோரிகான் மாவட்டத்தில் 170 ஏக்கர் நிலத்தை டாடா குழுமத்துக்கு அந்த மாநில அரசாங்கம் குத்தகைக்கு கொடுத்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 27ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த புதிய ஆலை அமைய இருக்கிறது. டாடா குழுமத்தின் மூத்த அதிகாரிகளான கனிநிகா தாகூர், ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது உடன் இருந்தனர். இந்த புதிய ஆலையின் மூலம் 30ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதல் கட்டமாக இந்த ஆலை அடுத்தாண்டு பாதியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த ஆலையை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மார்ச் 13 ஆம் தேதி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ISP,ஒயர் பாண்ட், பிளிஃப் சிப் உள்ளிட்ட தயாரிப்புகளை டாடா குழுமம் தொடங்க இறுக்கிறது. ஆட்டோமொபைல், நெட்வொர்க் உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் இந்த சிப்புகள் தேவைப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு, தொழில் மற்றும் மின்சாதன பொருட்களின் உற்பத்திக்கு இந்த ஆலை பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்சாலைகள் சார்ந்த உற்பத்திகளாக புதிய சிப் தயாரிப்பு ஆலை இருக்கும் என்றும் அந்த குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.