22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

டாடா இன்வெஸ்ட்மென்ட் பங்குகள் ஏற்றம்:

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட 20 சதவீதம் உயர்ந்து ₹10,598 ஆக முடிவடைந்தது, இது NSE இல் ₹10,611.50 ஆக பங்கு வர்தகத்தின் இடையே உச்சத்தை எட்டியது. அக்டோபர் 6 ஆம் தேதி டாடா கேபிடல் அதன் ₹15,512 கோடி ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) தொடங்க உள்ளதே இதற்கு காரணம்.

கடந்த மூன்று அமர்வுகளில் இந்த பங்கு 22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 54 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. தினசரி வர்த்தக அளவு 54.39 லட்சம் பங்குகளாக உயர்ந்துள்ளது. இது 30 நாள் சராசரியை விட சுமார் 12 மடங்கு அதிகமாகும். ₹5,356 கோடி மதிப்பு கொண்ட, 38 தொகுதி ஒப்பந்தங்களில் 3.36 லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் கைமாறின. திங்கட்கிழமை முடிவடைந்த ₹8,843 விலையை விட அதிக விலையில் கைமாறின.

டாடா கேபிடல் அதன் IPO-க்கான விலைக் குழுவை ஒரு பங்கிற்கு ₹310-326 என நிர்ணயித்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் ₹1.38 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பங்கு வெளியீடு அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி முடிவடையும். அக்டோபர் 3 ஆம் தேதி பெரிய முதலீட்டாளர்களுக்கான நங்கூர புத்தகம் (anchor book) வெளியிடப்பட உள்ளது. 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய IPO இது தான்.

டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் சமீபத்தில் 1:10 விகிதத்தில் அதன் முதல் பங்குப் பிரிவினையை அறிவித்தது. அக்டோபர் 14 ஆம் தேதி இதற்கான பதிவு தேதியாக அறிவிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹53,620 கோடியாகவும், மிதவை சந்தை மூலதன மதிப்பு ₹13,737 கோடியாகவும் உள்ளன. பிப்ரவரியில் குறைந்தபட்சமாக ₹5,145.15 ஆக இருந்த இந்தப் பங்கு, 52 வார உச்ச விலையாக ₹10,611.50க்கு விற்பனையாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *