டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 3,052% ரிட்டன்ஸ்.,
மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் சவுத் இந்தியன் வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வாகனம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கி கடன் வசதி செய்து தர இருக்கிறது. டாடா மோட்டார்ஸின் இந்த அறிவிப்பை அடுத்து அந்நிறுவனத்தின் 4 ஆவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஆயிரம் ரூபாய் 5 காசுகளாக உயர்ந்திருக்கிறது. இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3,32,390 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு டாட மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு வெறும் 31.73 ரூபாயாக இருந்தது. கடந்த ஒரே ஆண்டில் டாடா மோட்டார்ஸின் பங்கு மதிப்பு 26.5 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 5 ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் மதிப்பு 377.5% உயர்ந்திருக்கிறது. இதேபோல் அந்நிறுவனத்தின் மொத்த லாபம் மட்டும் 3,051% ரிட்டர்ன்ஸ் தந்திருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 1 டன் முதல் 55 டன் வரை சரக்குகளையும் 10 பேர் முதல் 51 பேர் வரை பயணிக்கும் வணிக வாகனங்களும் உள்ளன. 2024-ல் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 741%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் ஓராண்டு இலக்கு ஆயிரத்து 28 ரூபாயாக இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1:2 என்ற கணக்கில் பிரிய இருக்கிறது.