2022-23 நிதியாண்டில் 50,000 மின் வாகனங்கள் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் இலக்கு !
TPG கேபிட்டலின் பில்லியன் டாலர் நிதியுதவி மற்றும் புதிய அளவிலான மாடல்களின் ஆதரவுடன், டாடா மோட்டார்ஸ் 50,000 மின் வாகனங்களை ஏப்ரல் தொடங்கி அடுத்த நிதியாண்டில் உற்பத்தி செய்யும் திட்டத்துடன் உள்ளது, 2023 நிதியாண்டில் மின் வாகனங்களின் உற்பத்தித் திட்டத்தில் 50,000 விற்பனையாளர்களை டாடா நிறுவனம் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் 125,000-150,000 யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களின் வணிகமானது இலக்குகளை அடைந்தால், நிதியாண்டு 23 ல் டாடா மோட்டார்ஸுக்கு ரூ. 5,000 கோடி வருவாயை ஈட்டக்கூடும் என்று விஷயமறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
வரவிருக்கும் 12லிருந்து 18 மாதங்களில், டாடா மோட்டார்ஸ், Tiago EV மற்றும் பன்ச் SUV , Altroz ஹேட்ச்பேக்கின் மின்சார வாகனங்களை ரூ.10 லட்சத்திற்கும் குறைவான வரம்பில் வரிசைப்படுத்தியுள்ளது. ஒரு முழு சார்ஜில் குறைந்தபட்சம் 200 கிமீ தூரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், முன்னணியில் இருக்கும் மாருதி சுசூகியோ. அல்லது ஹூண்டாய் மோட்டார்ஸோ 2024 – 25 ஆண்டுக்கு முன், பயணிகள் வாகன சந்தையில் EV களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் எம்.டி., ஷைலேஷ் சந்திரா, “சப்ளை அதிகரித்தாலும் வாடிக்கையாளர்கள் 5-6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது, என்றார். Nexon EV பயன்படுத்திய 30% வாடிக்கையாளர்களைப் கடந்த காலத்தில் பெற்றோம். இப்போது அது 65% ஆக உயர்ந்துள்ளது” என்று கூறினார். நடப்பு நிதியாண்டில் அதன் மின்சார வாகனங்களின் அளவு 17,000-18,000 யூனிட்டுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியாண்டு 22 இன் முதல் ஒன்பது மாதங்களில், டாடா மோட்டார்ஸ் சுமார் 10,000 மின்சார வாகனங்களை விற்றது. EVS இல் நிறுவனத்தின் சந்தைப் பங்கு FY19 இல் 18% ஆக இருந்து 2021 இறுதியில் 82% ஆக உயர்ந்துள்ளது.