ஜெனரல் மோட்டார்ஸை மிஞ்சிய டாடா மோட்டார்ஸ்..
சந்தை மூலதன அடிப்படையில் ஜெனரல் மோட்டார்ஸை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிஞ்சியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு ஜெனரல் மோட்டார்ஸின் பாதி அளவு கூட இல்லாமல் இருந்த டாடா மோட்டார்ஸின் சந்தை மூலதன மதிப்பு இந்தாண்டு 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. சந்தை மூலதன அடிப்படையில் ஜெனரல் மோட்டார்ஸின் மதிப்பு 49.6 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
2019 நிதியாண்டில் தொடங்கி 2022 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த டாடா நிறுவனம் 2023-ல் நிகர லாபம் மட்டும் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. டாடா மோட்டார்ஸ் பங்குகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து 16 விழுக்காடு உயர்ந்து வருகிறது. அண்மையில் ஜப்பானின் ஆலோசனை நிறுவனமான நோமுரா நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்று பச்சைக்கொடி காட்டியதை அடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் கணிசமாக விலை உயர்ந்துள்ளன. டாடா மோட்டார்ஸ் வளரும் அதே நேரம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கணிசமாக சரிவை கண்டு வருகிறது. மார்கன் ஸ்டான்லி நிறுவனம், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டை குறைத்ததால் அதன் லாபமும் கடந்த 12 மாதங்களில் 11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது