கடனில் இருந்து மீளும் டாடா மோட்டார்ஸ்..
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலாண்டில் தங்கள் நிறுவன கடன் முடிந்துவிட்டதாகவும், 48 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தீர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 2024 காலாண்டின் கடைசி காலகட்டத்தில் 17407 கோடி ரூபாய் லாபம் கிடைத்ததாகவும், இது கடந்தாண்டு இதே காலாண்டில் வெறும் 5,408 கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டின் கடைசி காலாண்டைவிட 3 மடங்கு அதிக லாபத்தை சந்தித்து உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ரேஞ்ச் ரோவர் வகை சொகுசு எஸ்யுவி கார்களின் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை வருவாய் மட்டும் 7.9 பில்லியன் பவுண்ட்டில் இருந்து 29.0 பில்லியன் பவுண்டாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. 0.7 பில்லியன் பவுண்ட் அளவுக்கான கடனை ,கடந்த நிதியாண்டின் இறுதியில் முடித்துவிட்டதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஜனவரியில் இருந்து மார்ச் வரையிலான காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் வணிகவாகனங்கள், கார்கள், எஸ்.யுவி ரக வாகனங்களின் மொத்த வருவாய் 1.2 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது 13 விழுக்காடு அதிகமாகும். ஜனவரியில் இருந்து மார்ச் வரையிலான காலகட்டத்தில் 17,900 கோடி ரூபாய் செயல்பாட்டு வருவாயாகவும், 26.6விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு வருவாயாகவும் உயர்ந்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிகப்பிரிவும் கடன் இல்லாத நிறுவனமாக மாறியுள்ளதாகவும், அதன் லாபம் ஜாக்குவார் லேண்ட் ரோவர் பிரிவு நெட் கேஷ் நிலையை 2025 நிதியாண்டில் எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொதுத்தேர்தல் மற்றும் வெப்ப அலை வீசுவதால் கார்கள் விற்பனைக்கான தேவை சற்று குறைந்திருக்கிறது. எனினும் மின்சார கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2024 நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை , கடந்த நிதியாண்டைவிட 47 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை அருகே அமைய இருக்கும் ஆலையில் ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்பட்டால் புதிய மின்சார வாகன கொள்கைகளின் மூலம் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பி.பி. பாலாஜி தெரிவிக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வணிக பயன்பாட்டு பிரிவு மற்றும் தனிநபர் வாகனங்கள் என 2 பிரிவுகளாக அடுத்த 12 மாதங்களில் பிரியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.