Air India-வின் CEO Ilker Ayci – Tata Sons நியமனம்..!!
Air Indiaவை வாங்கிய Tata Sons:
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, ஏர் இந்தியாவை டாடா குழுமம் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது. மொத்தப் பணத்தில் 2 ஆயிரத்து 700 கோடியை ரொக்கப் பணமாக கொடுத்த டாடா குழுமம், மீதமுள்ள 15 ஆயிரத்து 300 கோடிக்கு ஏர் இந்தியாவின் கடன்களை ஏற்று கொள்ளவும் டாடா குழுமம் ஒத்து கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி ஜனவரி 27-ம் தேதியன்று ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
Ilker Ayci நியமனம்:
இந்தியா இந்நிலையில், பிப்ரவரி 14-ம் தேதியன்று Tata Sons நிறுவனத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில், Ratan Tata. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் Ilker Ayci-யை நியமித்துள்ளதாக Tata Sons நிறுவனத் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார். இல்கர் அய்சி, இதற்கு முன்பாக துருக்கி விமான நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த அனுபவம் உள்ளதாகவும், அதனால் அவர் ஏர் இந்தியாவை திறம்பட நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.