பிரிட்டன் தேர்தலுக்கு பிறகு டாடாவுக்கு சரிவு…
அண்மையில் பிரிட்டனில் பொதுத்தேர்தல் நடந்தது இதில் தொழிலாளர் கட்சி பல ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி கணிசமாக ஜூன் மாதத்தில் உயர்ந்திருக்கிறது. ஆனால் அதே நேரம் மார்ச் மாத காலாண்டுடன் ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது. அதாவது கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 5.05 மில்லியன் டன் அளவுக்கு ஸ்டீல் உற்பத்தி இந்தியாவில் டாடா ஸ்டீல்ஸ் செய்தது. இந்தாண்டு இது 5.25 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. அதே நேரம் நெதர்லாந்திலும் உற்பத்தி அளவு உயர்ந்திருக்கிறது. ஆனால் பிரிட்டன் மற்றும் தாய்லாந்தில் உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் அது சார்ந்த பொருட்கள் உற்பத்திக்காக ஸ்டீல் விற்பனை அமோகமாக இருப்பதாகவும் அதாவது 14 விழுக்காடு இருப்பதாக கூறப்படுகிறது.
பிரிட்டனில் உள்ள டல்பார்ட் துறைமுகப்பகுதியில் உள்ள டாடா ஆலையை நவீனப்படுத்தவும் ஆட்குறைப்பு செய்யவும் அந்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் 14 ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்துள்ளதால், அந்த பணிகளுக்கு அரசு ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிட்டனில் இப்படி நிலைமை இருக்கும்போது இந்தியாவில் இருந்து கிடைக்கும் லாபத்தை நெதர்லாந்தில் பயன்படுத்த டாடா ஸ்டீல்ஸ் முடிவெடுத்துள்ளது. இந்த காரணிகளால் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் சந்தைகளில் லேசான சரிவை கண்டுள்ளன.