பங்குகளை திரும்ப வாங்கும் திட்டம்.. – ரூ.11,164 கோடி பெற்ற Tata Sons.!!
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ரூ. 18,000 கோடி பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தின்கீழ் 24.81 மில்லியன் பங்குகளை டெண்டர் செய்து டாடா சன்ஸ் ரூ. 11,164 கோடியைப் பெற்றுள்ளது.
ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கும் சிறு பங்குதாரர்கள் பைபேக்கில் 25.3 மில்லியன் பங்குகளை டெண்டர் செய்தனர். இதற்காக 6 மில்லியன் பங்குகளை பைபேக்கில் ஒதுக்கியது. மற்ற அனைத்து பங்குதாரர்களும் 5.7 மில்லியனை டெண்டர் செய்தனர். நிறுவனம் திரும்பப் பெற எண்ணிய 34 மில்லியன் பங்குகளை விட 8.1 மடங்கு அதிகமாக இருந்தது.
திரும்பப் பெற்ற பிறகு, TCS-இல் டாடா சன்ஸ் பங்கு 72.19 சதவீதத்தில் இருந்து 72.30 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு முதல், TCS நான்கு மறு கொள்முதல் திட்டங்கள் மூலம் ரூ.66,000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளது. அத்தகைய மறு கொள்முதல் திட்டங்களின் கீழ் திரும்ப வாங்கப்பட்ட பங்குகள் நிறுவனத்தின் வருவாய் விகிதங்களை மேம்படுத்துகிறது.