கில்லி விஜய் போல பேசிய டாடா ஸ்டீல் நிறுவன அதிகாரி!!!
கில்லி படத்தில் விஜய் பேசும் இந்தியன் எகனாமி ஈஸ் ஆல்வேஸ் அவர் எகனாமி என்ற வசனம் மிகப்பிரபலமானது. இதே பாணியில் பேசியுள்ளார் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் அதிகாரி டி.வி. நரேந்திரன். உலகளவில் பலநாடுகளும் உட்கட்டமைப்புகளை தீவிரமாக கருதாத நிலையில் இந்திய பொருளாதாரம் மிகச்சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பதை ஸ்டீல் வாங்குவதை வைத்தே தெரிந்துகொள்ள இயலும் என்றார். இந்தியாவில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தேவை அதிகரித்துள்ளதால் 5மெட்ரிக் டன் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கூறினார். நிலக்கரிக்கு பதிலாக ஹைட்ரஜனை களமிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், ஒரு கிலோ பசுமை ஹைட்ரஜன் 2 டாலருக்கு மேல் இருந்தால் வாங்கக்கூடாது என்றார். உற்பத்தி செலவு தினந்தினம் அதிகரித்து வருவதால் , சந்தை மூலதனத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார். இந்தியாவில் சிறப்பாக இருக்கும் டாடா ஸ்டீல்ஸ் ஐரோப்பாவில் எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சார விலை குறைவு என்ற காரணத்தால் ஸ்டீல் உற்பத்தியில் நல்ல லாபம் பார்க்க முடிவதாக கூறினார்.நெதர்லாந்தில் இருந்தும் இந்தியாவுக்கு ஸ்டீல் ஆலைகள் மூலமாக மாற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.இந்தியாவில் இருந்து ஸ்டீல் வெளியே ஏற்றுமதி செய்வதே லாபம் என்றும் தெரிவித்துள்ளார்.