35 பேரை வேலைவிட்டு தூக்கிய டாடா ஸ்டீல்ஸ்

விதிகளை மீறிய பணியாளர்களை பணிநீக்கம் செய்வது பரவலாக எல்லா நிறுவனத்திலும் நடக்கும் வழக்கமான செயல்தான் என்றாலும் அண்மையில் வெளியான டிசிஎஸ் நிறுவன புகாரை அடுத்து டாடா குழுமத்திலும் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. 35 பணியாளர்கள் விதிகளை மீறியதாக டாடா ஸ்டீல் நிறுவனம் அவர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. அண்மையில்தான் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்திலும் பல்வேறுபுகார்கள் எழுந்தன.875 புகார்கள் பதிவான நிலையில்,48 புகார்கள் பாதுகாப்பு தொடர்பாகவும், 669 புகார்கள் மனிதவள பிரிவு புகார்களும் பதிவாகியுள்ளன. டாடாவின் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் புகார்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மொத்தம் 38 புகார்களில் 3 புகார்கள் பாலியல் புகார்கள், 35 புகார்கள் ஏற்றுக்கொள்ள இயலாத தவறான நடவடிக்கைகள் என்று கூறப்படுகிறது. அண்மையில்தான் 100கோடி ரூபாய்க்கு வேலைக்கு லஞ்சம் வாங்கிய புகாரில் டிசிஎஸ் நிறுவனம் சிக்கியதால்,டாடா சன்ஸ் குழுமத்தலைவர் சந்திரசேகரன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. உலகளவில் தலைசிறந்த நிறுவனமாக டாடா குழுமம் திகழ்ந்து வரும் சூழலில் எந்த விதிமீறல்களையும் ஏற்க முடியாது என்று சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். டிசிஎஸ் நிறுவனம் தொடர்புடைய 6 முக்கிய நிர்வாகிகள், 6 நிறுவனங்களை அண்மையில் சந்திரசேகரன் தடை செய்தார். தொழிற்சாலைகளில் பாதுகாப்பு தொடர்பாக எந்த சமரசமும் செய்ய முடியாது என்று சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.