டாடா டெக் நாள் 2
இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரம் ரெம்ப பிசியான வாரமாக மாறியிருக்கிறது. டாடா டெக் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியடு,Flair writing, பெட்பேங்க் நிதிசேவைகள் மற்றும் கந்தார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் ஆரம்ப பங்குகள் வெளியிடப்பட்டுள்ளதால்தான் சந்தை பரபரப்பாகின. பங்குச்சந்தை ஆலோசகர்கள் சொன்ன ஆறுதலான வார்த்தைகளை நம்பி ஏராளமானோர் இந்த ஆரம்ப பங்கு வெளியீட்டில் அதிகம் முதலீடு செய்திருக்கின்றனர். இரண்டாவது நாளில் டாடா டெக் நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகள் 66.87 கோடி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 14.85மடங்கு அதிகமாகும். ஊழியர்கள் வாங்கும் அளவும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. மொத்த வெளியட்டில் 20.28 லட்சம் பங்குகள் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. பெட்பேங்க் நிதி சேவை நிறுவனத்தின் பங்குகள் 90 % சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது நாளில் மட்டும் 5.03 கோடி பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் மொத்த பங்கு அளவு 5.6 கோடி ஆகும்.
கந்தார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீட்டை 15.17 மடங்கு மக்கள் அதிகம் வாங்கியிருக்கின்றனர். மொத்த பங்கு அளவே 2.12 கோடிதான் ஆனால் வாங்கியிருக்கும் அளவு 32.22 கோடியாக இருக்கிறது. இதேபோல் ஃபிளேயர் ரைட்டிங் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் 6 மடங்கு அதிகம் அதிகம் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது. மொத்த பங்கு அளவு 1.44 கோடி, ஆனால் வாங்கியிருக்கும் பங்குகளின் அளவு 8.75 கோடி. IREDA நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீட்டில் பங்குகள் மீது 38.79 மடங்கு அதிகம் மக்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கின்றனர். மொத்த அளவு 47.09 கோடி பங்குகள் ஆனால் சப்ஸ்கிரைப் செய்திருக்கும் அளவு 1,826 கோடியாக அதிகரித்துள்ளது.