டாடா டெக் ஐபிஓ, முன்பே வாங்க முடியுமா?

20 ஆண்டுகளுக்கு பிறகு டாடா டெக் நிறுவனம் தனது ஐபிஓவை வரும் 22 ஆம் தேதி வெளியிட இருக்கிறது.
இந்த நிலையில் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்குகளை பிரீ அப்ளை என்ற முறையில் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 340 முதல் 345 ரூபாய் வரை விற்கப்பட இருக்கிறது. கிரே மார்கெட்டில் இந்த பங்கின் விலை ஒரு ஈக்விட்டி 475 முதல் 500ரூபாய் விற்கப்படுகிறது. 3 நாட்கள் மட்டுமே இந்த சிறப்பு ஐபிஓ திறந்திருக்கும்.இது கடந்த 20 ஆண்டுகளில் முதல் ஐபிஓவாகும். சந்தைக்கு வருவதற்கு முன்பே முன்பதிவு செய்வதைப்போல பிரீ அப்ளை முறையில் பங்குகளை சப்ஸ்கிரைப் செய்ய இயலும். டாடா டெக் ஐபிஓமூலம் உலகின் முன்னணி பொறியியல் சேவை நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த ஐபிஓவின் அதிகபட்ச பண மதிப்பு என்பது ஒரு ஷேர் 500ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனம் 20,283 கோடி ரூபாய்க்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.டாடா டெக் ஐபிஓ பங்குகளில் முதலீடு செய்வதை முதலீட்டாளர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். மற்ற நிறுவனங்களின் EPSஐ ஒப்பிடுகையில் டாடா டெக்கின் EPS வெறும் 32Xஎன்ற அளவிலேயே இருக்கிறது. டாடா டெக் நிறுவனத்தில் மட்டும் 11,000 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் உலகின் 18 நாடுகளில் இருக்கின்றனர். OFS வகையில் மட்டும் டாடா மோட்டார்ஸ் 4.62 கோடி பங்குகளை விற்ககடாடா திட்டமிட்டுள்ளது. முதலில் இந்த பங்குகள் 9.57 கோடி என்ற அளவில் திட்டமிடப்பட்டு பின்னர் 6.08 கோடியாக குறைக்கப்பட்டது. டாடா மோட்டார்ஸின் வெயிட்டட் சராசரி ஒரு பங்குக்கு ரூ.7.40ருபாயாக இரு்கிறது. இதுவே ஆல்பா டிசிக்கு 25.10 ரூபாயாக இருக்கிறது. டாடா டெக் நிறுவனத்தின் மதிப்பு 16,300கோடிரூபாயாக இருக்கிறது. இதில் TPGயின் பங்கு மட்டும் 9%. கடந்த 9 மாதங்களில் இந்நிறுவனத்தின் வருவாய் மட்டும் 15% அதிகரித்து 3052 கோடிரூபாயாக இருக்கிறது. நிகர லாபம் மட்டும் 407 கோடி ரூபாயாக இருக்கிறது.
ஜே.எம் பினான்சியல்ஸ், சிட்டி குழும மார்கெட் இந்தியா, உள்ளிட்டவை டாடா ஐபிஓவுக்கு முக்கிய நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.