டாடா டெக் ஐபிஓ அப்டேட் புதுசு….
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டாடா டெக் ஐபிஓ வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இதன் விலை நிலவரம் குறித்த தகவ்கள் வெளியாகியுள்ளன.ஒரு ஈக்விட்டி பங்கின் விலை 475 முதல் 500 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 24 ஆம் தேதியே இந்த ஆரம்ப பங்கு வெளியீடு முடிந்துவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் சேவை துறையிலும், டிஜிட்டல் தீர்வுகள்,oEMஎனப்படும் நிறுவனங்களுக்கு சேவைகளை அளிப்பதும் டாடா டெக் நிறுவனத்தின் முக்கிய பணிகளாகும்.இந்த நிறுவனத்தில் 11ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.18 டெலிவரி மையங்களை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. OFS வகையில் இந்த ஐபிஓ எனப்படும் ஆரம்ப பங்கு முதலீடுகள் நடைபெற இருக்கின்றன. 4.62 கோடி பங்குகளை டாடா மோட்டார்ஸும்,ஆல்பா டிசி ஹோல்டிங் நிறுவனம் 97லட்சம் பங்குகளும்,டாடா கேபிடல் குரோத் ஃபண்ட் 48 லட்சம் பங்குகளையும் விற்க இருக்கின்றன.
9.57 கோடி பங்குகளுக்கு பதிலாக 6,03 கோடி பங்குகளை விற்க தற்போது முடிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப பங்கு வெளியீட்டுக்காக மார்ச் மாதமே பணிகள் தொடங்கப்பட்டு ,செபியின் ஒப்புதல் கடந்த ஜூன மாதத்தில் அளிக்கப்பட்டது. 30 ஈக்விட்டி பங்குகள் கொண்ட தொகுப்புகளாகத்தான் இந்த பங்குகளை வாங்க இயலும். 2ஆயிரத்து890 கோடி முதல் 3ஆயிரத்து 42 கோடி ரூபாய் நிதி திரட்ட முதல்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு 10%உள் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. வெயிட்டட் சராசரியாக டாடா மோட்டார்சுக்கு 7 ரூபாய் 40 பைசா ஒரு பங்குக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆல்பா டிசி ஹோல்டிங் நிறுவனத்தின் சராசரி ஒரு பங்குக்கு 25 ரூபாய் 10 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா டெக் நிறுவனத்தின் மொத்த மதிப்பு மட்டும் 16,300கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் டாடா டெக் நிறுவனத்தின் ஆண்டுக்கு ஆண்டு வருமானம் 3,052 கோடி ரூபாயாக இருக்கிறது.மொத்த வருவாயில் சேவைப்பிரிவு வருவாய் மட்டும் 88%ஆக இருக்கிறது.
சில்லறை முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்ச தொகை 15,000ரூபாயாகவும்,நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 21ஆயிரம் ரூபாயாகவும் விற்கப்பட இருக்கிறது.இன்ஸ்டிடியூஷனல் இன்வஸ்டார்ஸ் எனப்படும் முதலீட்டாளர்களுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயும் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா டெக் நிறுவன பங்குகளை அதன் ஊழியர்களே வாங்கிகொள்ளும் வசதியும் உள்ளது.2,028,342 பங்குகளாகவும் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலாட்மன்ட் இறுதி செய்யும் தேதி நவம்பர் 30,ரீபண்ட் தேதி டிசம்பர் 12,டீமாட் கணக்குகளில் வரவுவைக்கும் தேதி டிசம்பர் 4,பட்டியலிடும் தேதி டிசம்பர் 5 என அறிவிக்கப்பட்டுள்ளது.