வெத்தலய போட்டு பித்தளை அடிக்கும் டாடா..
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டாடாடெக் அண்மையில் ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்தது. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் 4.63 கோடி பங்குகளை விற்க திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் டாடாமோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் 2314 கோடி ரூபாய் நிதி திரட்ட இருக்கிறது. ஒரு பங்கின் விலை 500 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடனை குறைக்கவே நிறுவனத்திற்குள் புதிய நிதியை டாடா குழுமம் செலுத்திவருகிறது. 2025ஆம் ஆண்டிற்குள் கடனில் இருந்து முழுமையாக வெளியேறிவிட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள டாடா டெக் நிறுவனம் முதலில் 1994ஆம் ஆண்டு, உருவாக்கப்பட்டது. கோர் சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ் என்ற பெயரில் இருந்த நிறுவனத்தை டாடா கடந்த 1996-ல் கையகப்படுத்தியது. ஒரு பங்கு வெறும் 7.4 ரூபாயாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்போது வாங்கியது. அன்றைய மதிப்பில் இந்த நிறுவனத்தை வெறும் 34.கோடியே 24 லட்சம் ரூபாய் செலவு செய்து டாடா டெக் நிறுவனம் உறுவாக்கப்பட்டது. இதனால் அந்நிறுவனத்துக்கு தற்போது லாபமாக 2279 கோடி ரூபாயாக உள்ளது.
ஐபிஓவுக்கு முன்பாக 1613 கோடி ரூபாய் நிதியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9.9%பங்குகளை வெளியிட்டு திரட்டியது.
செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவன கடன் 38,700கோடி ரூபாய் அடைக்கப்பட்டது. இந்தாண்டு இறுதிக்குள் கடன்கள் இல்லாத நிலையை இந்தியாவிலும், JLRநிறுவனம் அடுத்தாண்டு கடன் இல்லாத நிலையை எட்டும் என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டாடா Elxsi,kPIT,Cyientஉள்ளிட்டவற்றைவிட டாடா மோட்டார்ஸ் பங்குகள் தான் மதிப்பு குறைவாக உள்ளது. நீண்டகால முதலீட்டுக்காக டாடா டெக்னாலஜீஸ் நிறுவன பங்குகளை வாங்கிப்போடும்படி பல தரகு நிறுவனங்களும் தெரிவிக்கின்றன. உலகளவில் நிலவும் மேம்பட்டு வரும் பொருளாதார சூழல் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. நவம்பர் 24 ஆம் தேதி வரை டாடா டெக் ஐபிஓ சந்தையில் கிடைக்க இருக்கிறது.