AI யார் வேலையையும் பறிக்காது- டிசிஎஸ் சிஇஓ..
இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமான டிசிஎஸில் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் கீர்த்திவாசன். இவர் அண்மையில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில் ஜெனரேட்டிவ் ஏஐ என்ற நுட்பத்தால் இந்தியாவிலும் உலகளவிலும் வேலைவாய்ப்புகள் குறையாது என்று கூறியுள்ளார். வரும் நாட்களில் பணிகளுக்கு ஆட்கள் அதிகமாகத்தான் தேவைப்படுவார்களே தவிர்த்து ஆட்களை குறைக்க வாய்ப்புகள் குறைவு என்று கூறினார். ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் புதுப்புது அம்சங்கள் உருவாகி வருகிறது என்றும் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்தி பணிகளை செய்ய பழகிவிடலாம் என்றார். செயற்கை நுண்ணறிவு குறித்து அதிக கணக்கீடு செய்திருப்பது தவறு என்றும் கீர்த்தி வாசன் குறிப்பிட்டுள்ளார். டிசிஎஸ் பணியாளர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக செயற்கை நுண்ணறிவு நுட்பம் கற்றுத்த தரப்படுகிறது என்றும் கூறியுள்ளார். ஒரு பொருளை அதாவது ஒரு மென்பொருளை உருவாக்கி , நிர்வகித்து அதன் பிறகு ஆட்டோமேஷன் செய்வதில் செயற்கை நுண்ணறிவும் உதவி செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். aws நிறுவனத்துடன் இணைந்து டிசிஎஸ் பணியாளர்களுக்கு அமேசான் வெப்சர்வரில் ஜெனரேட்டிவ் ஏஐ நுட்பத்தை 25,000 பணியாளர்களுக்கு கற்றுத்தரப்பட்டு வருகிறது.