ஜாக்பாட் மழையில் TCS.. – BSNL-ன் ரூ.550 கோடி ஆர்டர்..!!
டிசிஎஸ் தலைமையிலான கூட்டமைப்பு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து, 4ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்காக ரூ.550 கோடி ஆர்டரைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் வியாழக்கிழமையன்று கையெழுத்தானது.
நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
4G நெட்வொர்க்கிற்காக நாடு முழுவதும் 6,000 டவர்களை உடனடியாகவும், 6,000 மற்றும் இறுதியாக 1 லட்சம் டவர்களை நிறுவவும் பிஎஸ்என்எல் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கூறினார்.
5ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இணையாக நடந்து வருவதாகவும், இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.
எற்கனவே இந்திய பங்குச் சந்தையின் பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமத்தின் பங்குகள் இருப்பதால் அவற்றின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆர்டர்களை பெற்றுள்ளதால், டாடா பங்குகளின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.