டெலிமார்கெட்டர்கள் அபராதத்தை சந்திக்க நேரிடும் – TRAI
தேவையில்லாத அழைப்புகளை மேற்கொள்ளும் டெலிமார்கெட்டர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விரைவில் கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும் என தெரிகிறது.
இத்தகைய தகவல் தொடர்புக்கு தெளிவான விதிமுறைகள் இருந்தபோதிலும், விற்பனையாளர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து தேவையற்ற அழைப்புகளை நுகர்வோர் எதிர்கொள்கின்றனர்.
இதில் பெரும்பாலானவை நிதி தொடர்பானது என்றும் அடுத்ததாக ரியல் எஸ்டேட் தொடர்பான விளம்பரங்களே அதிகம் என்றும் ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.
இதனால் ஒரு அழைப்புக்கு ₹100 அபராதம் விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், தேவையற்ற அழைப்புகளைப் பெற்ற நுகர்வோருக்கு இந்தப் பணம் வரவு வைக்கப்படும் என்றும் டிராய் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொல்லைதரும் அழைப்பு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பிளாக்செயின் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை ஒழுங்குமுறை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர்களைக் கட்டுப்படுத்துவதில் சவால் உள்ளது என்று TRAI கூறியது.