கோயலுடன் டெஸ்லா அதிகாரிகள் பேச்சு…
பூமியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு பிறகு ஒரு நிறுவனம் மிகப்பெரிய பிரபலமடைந்திருக்கிறது என்றால் அது நிச்சயம் டெஸ்லா கார் நிறுவனம்தான்.குறிப்பிட்ட இந்த கார் நிறுவனம் இந்தியாவில்வணிகத்தை தொடங்க பல ஆண்டுகளாக படாதபாடுபட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் பிரதமர் மோடியை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கே சந்தித்து வணிகம் தொடர்பாக பேசியிருந்தார். இந்த நிலையில் டெஸ்லா நிறுவன அதிகாரிகள் மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து வணிகம் தொடர்பாக கூட்டம் ஒன்றை நடத்தினர். இந்தியாவிற்குள் 24ஆயிரம் டாலர்களுக்கு ஒரு மின்சார காரை உற்பத்தி செய்ய டெஸ்லா அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதற்காக தொழிற்சாலையை எங்கு அமைக்கலாம் என்று டெஸ்லா அதிகாரிகள் கோயலிடம் பேசி வருகின்றனர். புதுடெல்லியில் ஒரு ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்தும், வியாபார தொடர்புகளை உருவாக்கு குறித்தும் ஆராயப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெஸ்லாவின் உச்சகட்ட அதிகாரிகளும் இந்திய அமைச்சரும் ரகசியமாக சந்தித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு உலகளவில் மிகமுக்கிய கவனத்தை எட்டியிருக்கிறது.