மகாராஷ்டிராவில் டெஸ்லா ஆலை..
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான டெஸ்லா கார் தயாரிப்பு ஆலை இந்தியாவுக்குள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. துணை மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சொந்த ஊரான சத்தாராவில் இந்த ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐதராபாத்தைச் சேர்ந்த மெகா இன்ஜினியரிங் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்த நிலையில், தற்போது அந்த பேச்சுவார்த்தை மகாராஷ்டிரா பக்கம் திரும்பியுள்ளது. சிகேடி எனப்படும் முறையிலான ஆலையாக இந்த ஆலை அமைய இருக்கிறது. இவ்வாறு அமைக்கப்படும் அசம்பிள் செய்யும் ஆலைகளின் மூலம் வரி வெகுவாக குறைய இருக்கிறது. இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டுக்குள் இந்தியாவிற்குள் டெஸ்லா தனது வணிகத்தை தொடங்க இருக்கிறது. டெஸ்லாவின் இந்திய பிரிவு தலைவர் பிரஷாந்த் மேனன் அந்த பதவியில் இருந்து விலகினார். சத்தாரா என்பது புனேவில் இருந்து 110 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. தொழில்வளம் நிறைந்த பகுதியில் ஆலையை அமைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. முதலில் இந்த ஆலையை தலைநகர் டெல்லியில் அமைக்கத்தான் திட்டம் இருந்தது. ஆனால் பட்ஜெட் அதிகரித்ததன் காரணமாக அந்த நிறுவனம் தற்போது மகாராஷ்டிராவை தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் டெஸ்லா தனது ஷோரூம் மற்றும் விற்பனையை தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான ஆரம்ப படியாக அண்மையில் வாடிக்கையாளர் சேவைப்பிரிவு உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
