ரஸ்னா நிறுவனத்துக்கு வந்த சோதனை..

வெயிலில் தாகம் ஏற்பட்டால் குளிர்பானங்கள் குடிக்க வேண்டும் அதுவும் ரஸ்னா குடித்தால் தெம்பு கிடைக்கும் என்று பட்டித் தொட்டியெல்லாம் தெரியும் அளவுக்கு புகழ்பெற்றது ரஸ்னா நிறுவனம்.இந்த நிறுவனத்தின் மீது தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாரத்ரோட் கேரியர் என்ற நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் ரவீந்திர குமார் கோயல் என்பவரை இடைக்கால அதிகாரியாக தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாரத்ரோட் கேரியர் நிறுவனம் ரஸ்னா நிறுவனம் மீது புகார் அளித்திருந்தது. அதாவது 71.3 லட்சம் ரூபாய் பணம் ரஸ்னா நிறுவனம் தரவில்லை என்பதுதான் புகார். சேவை சரியாக இல்லை அதனால் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு பணம் தரவில்லை என்று அப்போதே ரஸ்னா நிறுவனம் தெரிவித்திருந்தது.இதற்காக சட்ட தீர்ப்பாயம் சில சலுகைகளையும் ரஸ்னா நிறுவனத்துக்கு அளித்திருந்தது.ஆனால் அளிக்கப்பட்ட சலுகைகளை மீறி தற்போது தீர்ப்பாயம் தனது சாட்டையை ரஸ்னா நிறுவனம் மீது சுழற்றியுள்ளது.தற்போது புதிய பிரச்னை குறித்து அடுத்த 180 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.அதற்குள் பிரச்னையை தீர்க்கவில்லை என்றால் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவோம் என்றும் தீர்ப்பாயம் அதிரடி காட்டியுள்ளது.