அது ரொம்ப முக்கிய பாஸ்!!!
எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் ஒரு தொலைநோக்கு சிந்தனை அவசியம் என்று ஜூரோதா நிறுவனத்தின் நிதின் காமத் தெரிவித்துள்ளார். அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிதினிடம் நிபுணர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிதின், ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போதே, அதற்கு தணிக்கை வந்ததாலோ, கண்காணிக்கும் அமைப்பு உருவானால் எப்படி செயல்படவேண்டும் என தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். செபி அமைப்பை உதாரணமாக காட்டிய நிதின், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைனில் தங்கம் விற்ற அமைப்புகளை ஒழுங்குபடுத்திய செபியைப் போல எந்த ஒரு கட்டமைப்பிலும் தணிக்கை, கண்காணிப்பு, ஒழுங்குமுறை அமைப்பு அவசியம் என்றார். தனது நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான கைலாஷ்நாத் என்பவர் தங்கள் அலுவலகத்துக்கு தேவையான முக்கியமான அம்சங்களை சுற்றறிக்கையாக தயார் செய்து தேவையானபோது அதனை தெரிவிப்பதாக கூறயுள்ளார். ஒழுங்குமுறை அமைப்புகள் திடீரென பல கட்டுப்பாடுகளை ஒரேநாளில் கொண்டுவந்துவிடும் என்பதால் ஒட்டுமொத்த அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே ஒழுங்குமுறை அமைப்பு வரும் என்பதை கருத்தில் கொண்டு எந்த ஒரு பொருளையும் உருவாக்க வேண்டும் என்று நிதின் கூறியிருக்கிறார். தொழில்நுட்ப பங்குகளை வைத்திருப்போரும் தங்கள் பங்குகள் தணிக்கையால் பாதிக்கப்படலாம் .