16வது நிதிஆணைய பணிகள் இந்தாண்டே தொடங்குகிறதாம்..!!!
மாநில அரசாங்கங்களுக்கு வரி வருவாய்க்கான ஆதாரங்கள் மிகமிக குறைவாகவே இருக்கும்,ஆனால் மத்திய அரசுக்கு ஆக்டோபஸ் போல பல கைகளின் வாயிலாக, நிதி வந்து குவிவது வழக்கம், ஆனால் மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் உள்ள பிரச்னைகள் என்பது பன்நெடுங்காலமாக இருக்கும் பிரச்னையாகும். இந்த சூழலில் 16வது நிதிஆணையம் அமைப்பதற்கான பணிகள் இந்தாண்டே துவங்க அரசு திட்டமிட்டு வருகிறது. 2026ம் ஆண்டுவாக்கில், மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகளை தீர்க்கும் புதிய திட்டங்களும் இந்த நிதி ஆணையம் திட்டங்களை வகுக்க இருக்கிறது. கடைசியாக நவம்பர் 9, 2020 அன்று பழைய நிதி ஆணையம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்திருந்தது. இந்த ஆணைய அறிக்கையானது வரும் 2026ம் ஆண்டு வரையிலான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இருந்தது. இந்த நிலையில் 2027ம் ஆண்டுக்கான மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்க்கும் அம்சங்களை 16வது நிதி ஆணையம் அளிக்க இருக்கிறது. 15வது நிதி ஆணையம் 2025-2026ம் ஆண்டு நேரத்தில் வருவாய் பற்றாக்குறையை 4.5 விழுக்காடாக குறைக்க பரிந்துரைத்துள்ளது. தற்போதைய நடப்புக்கணக்கு பற்றாக்குறை 5.9 விழுக்காடாக இருக்கிறது.இது கடந்த நிதியாண்டை விட சற்றே குறைவாகும். கடந்த நிதியாண்டில் இது 6.4 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.